News January 24, 2025
கோவை மாவட்ட நிர்வாகிகள் நியமனம்!

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் இன்று (24.01.2025) அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் நேர்காணல் நடத்தி, புதிய மாவட்ட நிர்வாகிகளை நியமித்துள்ளார். இதில் கோயம்புத்தூர் மாவட்ட செயலாளராக சம்பத்குமார், மாவட்ட இணைச் செயலாளராக மைக்கேல் குண சிங், பொருளாளராக சத்தியமூர்த்தி மற்றும் துனைச் செயலாளர்களாக சுமதி, உன்னிகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News October 16, 2025
கோவை: +2 போதும் ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை!

கோவை மக்களே, மத்திய அரசின் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில், காலியாக உள்ள உதவியாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப 12ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 19,900 முதல் ரூ.63.200 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவகள் வரும், 23ம் தேதிக்குள் <
News October 16, 2025
கோவையில் வெளுக்கப்போகும் மழை!

தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், கோவை மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, கோவை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
News October 16, 2025
கோவையில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

விருதுநகரை சேர்ந்த சித்ரவேல், பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் விளம்பரப்படுத்தினார். இதனை நம்பி நிறுவனத்தில் பலர் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். முதலீடு செய்தவர்களுக்கு பணம் வரவில்லை. விசாரித்ததில் போலி நிறுவனம் என தெரிந்தது. பாதிக்கப்பட்டோர் டெல்லி சிபிஐயில் அளித்த புகாரின் வழக்கு பதிந்து, சித்ரவேலை தேடிய நிலையில், நேற்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வைத்து கைது செய்தனர்.