News April 3, 2025
கோவை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, கோவை மாவட்டத்தில் இன்று(ஏப்.3) பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News April 12, 2025
கோவை: கால சம்ஹாரீஸ்வர பைரவர் கோயில்

கோவை, ஆலாந்துறை, நாதேகவுண்டன்புதூரில், கால சம்ஹாரீஸ்வர பைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. 8 வாகனங்களில் 8 வகையான கால பைரவர்கள், சம்ஹார பைரவர்களாக இங்கு வீற்றிருக்கின்றனர். சக்திவாய்ந்த கால பைரவரை, அஷ்டமி நாட்களில், 11 தீபங்கள் ஏற்றி, வணங்கி வந்தால், கடன், வறுமை உள்ளிட்ட பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News April 12, 2025
வெள்ளிங்கிரியில் மூச்சு திணறி ஒருவர் உயிரிழப்பு

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை வெள்ளியங்கிரி மலையேறும் போது காஞ்சிபுரத்தை சேர்ந்த ரமேஷ் (42) மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார். 6 வது மலை அருகே நேற்று அதிகாலை வரும் போது அவர் மயங்கி விழுந்துள்ளார். அவர் உடல் கீழே கொண்டு வரப்பட்டது.
News April 11, 2025
போக்சோவில் சிக்கிய போதகர்: ஜாமின் கேட்டு மனு

கோவை சர்ச்சில் பாதிரியாராக பணியாற்றி வந்தவர் ஜான் ஜெபராஜ் (32). இவர் மீது இரு சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடைய தலைமறைவான மத போதகரை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்களும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.