News March 2, 2025
கோவை மாநகரில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பெரிய கடை வீதி இன்ஸ்பெக்டர் ராஜகுமார் காட்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், காட்டூர் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மதுவிலக்கு அமலாக்க பிரிவிற்கும் என பல்வேறு ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சிட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News April 22, 2025
ஜிம் உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

மேட்டுப்பாளையம் காவல் நிலைய பகுதியில் கடந்த ஏப்.19ல் ஊக்க மருந்துகளை விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டு ரூ.10 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் தலைமையில் ஸ்டேஷனில் ஜிம் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. அப்போது, மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகளை ஊக்க மருந்துகளாக கொடுக்க கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
News April 21, 2025
கோவை மாவட்ட வட்டாட்சியர் அலுவலக எண்கள்!

▶️கோவை (தெ) வட்டாட்சியர் 0422-2214225. ▶️கோவை (வ) வட்டாட்சியர் 0422-2247831. ▶️மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் 0425-4222153. ▶️சூலூர் வட்டாட்சியர் 0422-2681000. ▶️அன்னூர் வட்டாட்சியர் 0425-4299908. ▶️பேரூர் வட்டாட்சியர் 0422-2606030. ▶️மதுக்கரை வட்டாட்சியர் 0422-2622338. ▶️கி.கடவு வட்டாட்சியர் 04259-241000. ▶️ஆனைமலை 0425-3296100. ▶️பொள்ளாச்சி 04259-226625. ▶️வால்பாறை 0425-3222305. SHARE பண்ணுங்க.
News April 21, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு

தவெக பூத் கமிட்டி மாநாடு, வரும் 26,27 ஆகிய தேதிகளில், கோவை சரவணம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு, மேற்கு மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களுடன் பேசவுள்ளார். இதில் 2026 சட்டமன்ற தேர்தல் களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு விளக்கவுரை ஆற்றவுள்ளார்.