News March 22, 2025
கோவை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல்

கோவை மாநகராட்சியின் 25-26 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 27ம் தேதி வியாழன் காலை 10:30க்கு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. விக்டோரியா காலில் மாமன்ற நிதி குழு தலைவர் மு.பா.சீரா பட்ஜெட் தாக்கல் செய்கிறார். மறுநாள் நடக்கும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் இதன் மீது விவாதம் நடத்தப்படுகிறது.
Similar News
News March 29, 2025
பவானி ஆற்று நீர் மஞ்சள் நிறத்தில் தோற்றம்

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே பவானி ஆற்று நீர் இன்று (29-03-2025) மஞ்சள் நிறத்தில் தோற்றம் அளித்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இப்பகுதி மக்களுக்கு இந்த தண்ணீரே குடிதண்ணீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த அதிகாரிகள் தண்ணீரை பரிசோதனைக்கு எடுத்துச் சென்று ஆய்வு நடத்தினர்.
News March 29, 2025
25 ரவுடிகள் மாநகரை விட்டு வெளியேற உத்தரவு: கமிஷனர்

கோவை மாநகரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை வெளியேற்ற 25 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 110 ரவுடிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீறி வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். உத்தரவை மீறி உயர் நீதிமன்றத்தில் 2 தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அடுத்த கட்டமாக மேலும் 25 பேர் கண்டறியப்பட்டு மாநகரை விட்டு வெளியேற்ற உத்தரவு.
News March 29, 2025
கேன் வாட்டர் குடிப்பவர்கள் கவனத்திற்கு

கோடை காலம் முன்னரே கோவை மாவட்டத்தில் குடிநீர் கேன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். (Share பண்ணுங்க)