News May 15, 2024
கோவை மழைப்பொழிவு விவரம்

கோயம்புத்தூரில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மக்கினம்பட்டியில் 5செ.மீ, சூலூரில் 4செ.மீ, தொண்டாமுத்தூர், வால்பாறை PAP, ஆழியார், வால்பாறை தாலுகா அலுவலகம், ஆனைமலை தாலுக்கா அலுவலகம் ஆகிய பகுதிகளில் 3செ.மீ, விமான நிலையம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் 2செ.மீ, வாரப்பட்டி, கோவை தெற்கு, TNAU, பில்லூர் அணை, சோலையார் ஆகிய பகுதிகளில் 1செ.மீ பதிவானது.
Similar News
News November 6, 2025
அன்னூர் அருகே பயங்கர விபத்து: ஒருவர் பலி

ஈரோட்டைச் சேர்ந்தவர் சதீஸ்குமார். இவர் நேற்று மாலை கேரளாவில் வாழைக்காய் லோடு இறக்கிவிட்டு மினி லாரியில் புளியம்பட்டிக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார். அப்போது, அன்னூர்-சத்தி சாலை அருகே சத்தியிலிருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ்சும், மினி லாரியும் திடீரென்று மோதிக்கொண்டன. இதில், லாரி டிரைவர் சதீஸ்குமார் படுகாயம் அடைந்து சம்பவயிடத்திலே இறந்தார். மேலும், பேருந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்தனர்.
News November 6, 2025
துடியலூர்: அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் சுமார் 60 முதல் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள், துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 6, 2025
இடையர்பாளையம் அன்னாபிஷேகம் அலங்காரம்

கோவை மாவட்டம் இடையர்பாளையம் அடுத்த லட்சுமி நகர் பகுதியில், ஸ்ரீ அருள்மிகு லட்சுமி விநாயகர் கோவில் உள்ளது. கோவிலில் நேற்று அன்னாபிஷேகம் முன்னிட்டு சிவனுக்கு மற்றும் அம்மனுக்கும் அன்னாபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். இதில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


