News April 13, 2025
கோவை: மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது

இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, கோவை போலீசார் விசாரித்து வந்தனர். இதனிடையே அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், முணாறில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார், மூணாறில் ஒரு ரெசாட்டில் இருந்த, ஜான் ஜெபராஜை கைது செய்து, காந்திபுரம் காவல்நிலையம் அழைத்து வந்தனர்.
Similar News
News November 12, 2025
கோவை மக்களே.. உடனே இத SAVE பண்ணுங்க

1) கோவை அரசு தலைமை மருத்துவமனை – 0422-2301393.
2) சிங்காநல்லூர் அரசு இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை – 0422-2574391.
3) மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை – 04254-222027.
4) பொள்ளாச்சி அரசு மருத்துவமனை – 04259-229322.
5) வால்பாறை அரசு மருத்துவமனை – 04253-222533.
மிக முக்கிய தொடர்பு எண்களான இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 12, 2025
கோவை: 10th போதும் ரூ.56,000 சம்பளத்தில் அரசு வேலை!

கோவை மக்களே, மத்திய அரசின் சுங்க வரித்துறையில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th தகுதி போதுமானது. மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News November 12, 2025
கோவை சாலைகளில் லாரி விபத்துகளில் 32 பேர் உயிரிழப்பு

கோவை நகரில் ஜனவரி முதல் அக்டோபர் வரை லாரிகள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இது அதிகம். பீக் ஹவரில் லாரி நுழைவுத் தடையும், மணிக்கு 30 கி.மீ வேக வரம்பும் அமலில் இருந்தாலும், மீறல்கள் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்த போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


