News September 13, 2024
கோவை மக்களே செப்.16-க்குள் புகார் அனுப்பலாம்

மேற்கு மண்டல அஞ்சல் துறை சாா்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் செப். மாத மண்டல அளவிலான அஞ்சல் குறைகேட்பு கூட்டம் மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அஞ்சல் வாடிக்கையாளா்கள் புகாா்களை அஞ்சல் துறைத் தலைவா், மேற்கு மண்டல அலுவலகம் கோவை -641030 என்ற முகவரிக்கு செப்.16ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News December 12, 2025
கோவையில் வேலை வேண்டுமா?

கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (டிச.13) காலை 8 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 285 நிறுவனங்கள் பங்கேற்று 19,824 பணியிடங்கள் வழங்குகின்றன. மேலும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 94990-55937 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News December 12, 2025
கோவை: தங்கம் பதக்கத்தை தட்டி தூக்கிய சிறுவன்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ள சோமையம்பாளையத்தில் 3-ம் வகுப்பு மாணவன் ஆத்விக், சென்னையில் அண்மையில் நடைபெற்ற 35-வது மாநில ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 வயதுக்குட்பட்ட இன்லைன் ஸ்பீட் பிரிவில் தங்கம் வென்று கோவைக்கு பெருமை சேர்த்தார். இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள், பயிற்சியாளர் உள்ளிட்ட பலரும் மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News December 12, 2025
கோவை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்புக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிசம்பா் 19-ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடா்பான பிரச்னைகளை மனுவாக சமா்ப்பிக்கலாம். இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


