News August 10, 2024
கோவை மக்களே உடனே விண்ணப்பிக்கவும்

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் கேலோ இந்தியா திட்ட நிதியுதவியில், தொடக்க நிலை கால்பந்து பயிற்சிக்கான மாவட்ட மையம் கோவை நேரு விளையாட்டரங்கில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கால்பந்து பயிற்சி மாவட்ட மையத்தில் பயிற்சியாளா் இப்பணிக்கு ஆக.13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 7, 2025
கோவைக்கு மற்றொரு வந்தே பாரத் சேவையை தொடங்கும் மோடி!

கேரள மாநிலம் எர்ணாகுளம்–பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நவம்பர் 8 அன்று காலை 8 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்குகிறார். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயங்கும் இந்த ரயில் சேவை தெற்கு ரயில்வே நேர அட்டவணையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொங்கு மண்டல பயணிகள் பெரிதும் பயனடைய உள்ளனர்.
News November 7, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (07.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
கோவை சம்பவம்: அதிரடி நடவடிக்கை

கோவையில் அனுமதி இன்றி இயங்கும் மகளிர் விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. சமீபத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பவன்குமார் தலைமையில் சமூக நலத்துறை, காவல் துறை இணைந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது. அனுமதியின்றி இயங்கும் விடுதிகள் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


