News May 16, 2024
கோவை: பழைய பேருந்துகள் படிப்படியாக நிறுத்தம்

போக்குவரத்து கழக கோவை மண்டல பொது மேலாளர் ஸ்ரீதரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் இயக்கப்பட்டு வரும் பழைய பேருந்துகளை படிப்படியாக நிறுத்திவிட்டு புதிய பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாக தமிழக அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டல பொதுமேலாளர் ஸ்ரீதரன் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
கோவையில் மீண்டும் பாலியல் தொல்லை! அதிரடி கைது

வடவள்ளியைச் சேர்ந்த கிஷோர்குமார் வில்வித்தை பயிற்சியாளர். இவரிடம் பயிற்சி பெற்று வந்த 15-வயது சிறுமியை சமீபத்தில் சென்னையில் பார்த்த போது காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மயக்கமடைந்த சிறுமியிடம் விசாரித்ததில், கடந்த 2 ஆண்டாக கிஷோர்குமார் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்று போலீசார் அவரை கைது செய்தனர்.
News November 24, 2025
மேட்டுப்பாளையம் அருகே விபத்து

மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை மேல் மைதானம் பகுதியில் காய்கறி மார்க்கெட்டில் நீலகிரியில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி, அங்குள்ள பைக் மீது மோதியது. இதனால் இளைஞர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். சுற்றுப்புற மக்கள் உடனடியாக மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 24, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் நேற்று (23.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


