News May 10, 2024

கோவை நுகர்வோர் கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

கோவை அசோக்நகர் சேர்ந்த சந்தோஷ் கடந்த 2022 ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் ரூ.22,999 செலுத்தி ஏசி பெற்றார். வாங்கிய சில நாட்களிலேயே ஏசி பழுதானது. ஏசியை அந்த நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பி விட்டு பணம் கேட்டு கொடுக்க மறுக்கவே நுகர்வோர் கோர்டில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் ஏசிக்கான பணம் ரூ.22,999, மன உளைச்சலுக்கு ரூ.25 ஆயிரம், வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

Similar News

News August 9, 2025

கோவை: திருமண தடையை நீக்கும் அதிசய தலம்!

image

கோவை, அனுவாவியில் மலையின் மையப் பகுதியில், இயற்கை எழிலுடன் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோயிலில் முருகப்பெருமான், சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு திருமணத் தடை உள்ளவர்கள் சாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் 5 செவ்வாய்களில் வழிபாடு செய்கிறார்கள். SHARE பண்ணுங்க!

News August 9, 2025

கோவையில் உதவியாளர் வேலை: ரூ.76,000 சம்பளம்!

image

கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 51 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

News August 9, 2025

கோவை மாவட்டத்தில் ஆக.11 ல் குடற்புழு நீக்க முகாம்

image

கோவை மாவட்ட நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசின் இரண்டாம் சுற்று குடற்புழு நீக்க முகாம் வரும் ஆக.11 ல் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்கு உள்பட்ட 9,55,919 பேருக்கும், 20 முதல் 30 வயது உள்ள 2,66,963 பெண்கள் என மொத்தம்12,22,882 பயனாளிகள் பயனடையவுள்ளனா். விடுபட்டவா்களுக்கு ஆக.18 அன்று வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!