News September 13, 2024

கோவை தொழிலதிபருக்கு அரசியல் கட்சியினர் ஆதரவு

image

கோவை தொழில் முனைவோர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன் தொழிலதிபர் ஸ்ரீனிவாசன், ஜிஎஸ்டி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதனையடுத்து ஸ்ரீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டார். இந்த வீடியோ வைரல் ஆன நிலையில், கேள்வி கேட்ட தொழிலதிபரை மன்னிப்பு கேட்க வைத்ததாக பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து, அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News December 5, 2025

போத்தனூர்–பரௌனி ரயில் தாமதமாக இயக்கப்படும்

image

சேலம்–ஈரோடு ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூர்–பரௌனி விரைவு ரயில் டிசம்பர் 6, 13, 20 மற்றும் 27 ஆம் தேதிகளில் தாமதமாக இயங்கும். வழக்கமான 11.50 மணிக்கு பதிலாக, ரயில் 50 நிமிட தாமதத்துடன் மதியம் 12.40 மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News December 5, 2025

கோவை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News December 5, 2025

மாதம்பட்டியில் ஒரு தலை காதலால் மாணவர் தற்கொலை!

image

கோவை மாதம்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் கீர்த்தி வாசன்(17). இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்துள்ளார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். கோவை ஜிஎச்சில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். பேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!