News April 14, 2025

கோவை: திருட்டை தடுக்க இத பண்ணுங்க!

image

கோவையில் வெளியூர் செல்லும் பொதுமக்கள், தங்கள் வீடுகள் பூட்டப்பட்டிருந்தால், காவல் நிலையங்களில் தெரிவிக்கலாம். திருட்டை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும் என காவல் ஆணையர் உறுதி அளித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் முகவரி மற்றும் வீடு எத்தனை நாட்களுக்குப் பூட்டி இருக்கும் போன்ற தகவல்களை அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, 81900-00100 எண்ணிலோ தெரிவிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. இதை SHARE பண்ணுங்க!

Similar News

News July 7, 2025

காதலி பிரிந்த விரக்தியில் வாலிபர் தற்கொலை

image

வால்பாறையை சேர்ந்தவர் சீனிவாசன்(29). குனியமுத்தூர் பகுதியில் தங்கி இருந்த வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் கருத்து வேறுபாடு காரணமாக இவரிடம் விலகி இருந்ததாகவும் கூறப்படுகிறது. காதலி பேச மறுத்த விரக்தியில் சீனிவாசன் நேற்று முந்தினம் இரவு தனது அறையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரது நண்பர் அளித்த தகவலின் பெயரில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

News July 6, 2025

கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

image

உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஜபார். இவரது மனைவி மன நலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி வந்துள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார், அப்துல் ஜபார் இறந்து 6 நாள்கள் ஆனதை உறுதிசெய்தனர். அவரது மனைவியிடம் விசாரித்த போது, எலி இறந்து வாடை வருவதாக நினைத்தேன் என்றார். கணவன் இறந்தது கூட தெரியாமல், மனைவி வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News July 6, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (06.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!