News August 24, 2024

கோவை: திமுக சார்பில் மாபெரும் பேச்சுப்போட்டி

image

கோவை கேஸ் கம்பெனி தாரஹா மஹாலில் கோவை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் என் உயிரிலும் மேலான என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி துவங்கியது. இந்நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கூடலூர் நகர மன்ற தலைவர் அறிவரசு மற்றும் இளைஞர் அணி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News

News July 8, 2025

கோவை மாவட்டத்தில் வேலை வேண்டுமா?

image

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட சுகாதார அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, 10th, 12th, டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.14,000 முதல் ரூ.23,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். ஜூலை.18-ம் தேதி கடைசி ஆகும். (SHARE பண்ணுங்க)

News July 8, 2025

கோவையில் வேலை! தேவையான ஆவணங்கள்

image

கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://coimbatore.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன், ▶️கல்வித்தகுதி சான்றிதழ், ▶️அனைத்து மதிப்பெண்கள் சான்றிதழ்களின் நகல்கள், ▶️சாதி சான்றிதழ், ▶️இருப்பிட சான்றித நகல் (குடும்ப அட்டை/ ஆதார அட்டை). இந்த ஆவணங்களின் நகல்களில் அனைத்திலும் சுயசான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.

News July 8, 2025

கோவை: இன்று இப்பகுதியில் மின்தடை

image

கோவையில் பெரியநாயக்கன் பாளையம், மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், தேவராயபுரம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின்நிலையத்திற்கு கீழ் உள்ள பகுதிகளில் இன்று(ஜூலை.8) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!