News August 24, 2024

கோவை: திமுக சார்பில் மாபெரும் பேச்சுப்போட்டி

image

கோவை கேஸ் கம்பெனி தாரஹா மஹாலில் கோவை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் என் உயிரிலும் மேலான என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி துவங்கியது. இந்நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கூடலூர் நகர மன்ற தலைவர் அறிவரசு மற்றும் இளைஞர் அணி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News

News October 22, 2025

கோவையில் வீடு தேடி வரும் அபராதம்

image

கோவை மாநகராட்சியில் தினமும், 1,200 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. இக்குப்பை, வெள்ளலுார் கிடங்கில் குவிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, பொது இடங்களில் குப்பையை வீசிவிட்டு செல்பவர்களின் வாகன பதிவு எண்ணை வைத்து, ரூ.1,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை, அபராதம் விதிக்கப்படும். இதனை அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வசூலிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News October 22, 2025

ஊட்டி மலை ரயில் சேவை நாளையும் ரத்து

image

கனமழையால் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையிலான மலை ரயில் பாதையில் கல்லாறு – ஹில்குரோவ் இடையே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முன்தினம் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளம் சேதமடைந்தது. இதனால் அன்றைய தினம் மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் பணிகள் இன்னும் நிறைவடையாததால் நாளை(அக்.21) அன்றும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News October 22, 2025

கோவையில் நாளை விடுமுறை இல்லை

image

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழையும், சில சமயங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நாளை(அக்.22) கனமழைக்கு வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!