News April 14, 2025
கோவை: சித்திரையில் கண்டிபாக செல்ல வேண்டிய கோயில்கள்!

தண்டுமாரியம்மன் கோயில் – உப்பிபாளையம். கோனியம்மன் கோயில் – கோவை. மாசாணியம்மன் கோயில் – ஆனைமலை. வனபத்ரகாளியம்மன் கோவில் – மேட்டுப்பாளையம். செல்லாண்டியம்மன் கோயில் – சிங்கநல்லூர். அங்காளம்மன் கோயில் – சூலூர். கொண்டத்துக்காளியம்மன் கோயில் – ஒத்தக்கால் மண்டபம். கரியகாளியம்மன் கோயில் – தாளக்கரை. சித்திரை மாதம் அம்மன் கோயில்களுக்கு செல்வதால் வெப்பத்தினால் ஏற்படும் நோய்கள் அண்டாதாம். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News October 20, 2025
கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 40 ‘ஏஐ கண்கள்’!

கோவை அவினாசி சாலையில் உள்ள ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில், அதிவேக வாகனங்களால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க, ஏஐ தொழில்நுட்பத்தில் 40 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேம்பாலத்தில் வேகக் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகளைக் கண்காணிக்கவும், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் இந்த கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
News October 20, 2025
கோவை: ஒப்பணக்கார வீதியில் பொதுமக்கள் கூட்டம்

தமிழகம் முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கடைசி நாள் என்பதால், கோவை ஒப்பணக்கார வீதியில், துணிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம், அலை மோதி வருகிறது. மேலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டு வருவதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 19, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (19.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.