News March 14, 2025
கோவை சாரதாம்பாள் கோயில்

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் புகழ்பெற்ற சாரதா அம்மன் கோயில் உள்ளது. இங்கு மற்ற சீற்றம் கொண்ட அம்மனை போலல்லாமல், சாரதாம்பாள், இனிமையான முகம், அழகான ஈர்ப்பு, அமைதியான அம்சங்களுடன் காட்சி தருகிறாள். கோவையில் முக்கிய தெய்வங்களில் ஒன்றாகவும், மிகவும் சக்தியவாந்தவளாகவும் விளங்கும் சாரதாம்பாளை வணங்கினால், அனைத்து தடைகளும் நீங்குவதோடு, மன அமைதி கிடைக்குமாம். குடும்பத்துடன் ஒருமுறை சென்று பாருங்க.
Similar News
News March 15, 2025
ரயில் பயணிகள் கவனத்திற்கு

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மார்ச்.16ல் ஆலப்புழை – தன்பாத் விரைவு ரயில், எர்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயில் ஆகியவை போத்தனூா்- இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள் கோவை ரயில் நிலையம் செல்வது தவிா்க்கப்படும். போத்தனூா் தற்காலிக நிலையமாக செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 15, 2025
முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்

கோவை கலெக்டர் பவன் குமார் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைகேட்பு முகாம் மற்றும் சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கு கூட்டம் வரும் மார்ச்.20 ஆம் தேதி கலெக்டர் பவன் குமார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமினை பயன்படுத்தி பயன்பெற அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
News March 15, 2025
கோவையில் பாடுவது மிகவும் மகிழ்ச்சி: ஹாரிஸ் ஜெயராஜ்

கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் இன்று (மார்ச்.15) “Rocks on Harris” என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து நேற்று ஹாரிஸ் ஜெயராஜ் செய்தியாளர் சந்திப்பில், 36 பாடல்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு தொடங்கி இருப்பதாகவும் கோவையில் பாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.