News January 3, 2025
கோவை கேஸ் கசிவு: பள்ளிகளுக்கு விடுமுறை!

கோவை மரக்கடை மேம்பாலம், உப்பிலிபாளையம் பகுதியில், கேஸ் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்த டேங்கரில், கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாதுகாப்பு கருது, லாரி விபத்துக்குள்ளான இடத்தில், அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
அன்னூர் அருகே சம்பவ இடத்திலேயே பலி!

ஈரோட்டில் இருந்து அன்னூர் வழியாக ஊட்டிக்கு அரசு பேருந்து இன்று சென்றுள்ளது. அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் வழியாக இளைஞர் ஒருவர் டூவீலரில் சென்றுள்ளார். பொகளூர் தாளத்துறை பிரிவு அருகே அரசு பேருந்தும், டூவீலரும் மோதியதில், இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
News November 14, 2025
உக்கடம் இளைஞர் விபரீத முடிவு!

கோவை உக்கடம் கோட்டைமேடை சேர்ந்தவர் அந்தோணி நோவா(31). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த இவர் கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் கோவை ஜிஎச்சில் அனுமதித்த நிலையில் நேற்று பலியானார். உக்கடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 14, 2025
அன்னூரில் தோண்டி எடுக்கப்பட்ட உடல்!

அன்னூரில் முறையற்ற உறவு வெளியே தெரிந்ததால் மூதாட்டியை கொலை செய்து இயற்கை மரணமடைந்ததாக நாடகமாடிய நாகேஷ் – ஜாய் மெட்டில்டா ஆகியோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட மயிலாத்தாளின் சடலம் நேற்று கோவை ஜிஎச் பேராசிரியர் மனோகரன், தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் ஆகியோர் தலைமையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு முக்கிய பாகங்கள் எடுத்து செல்லப்பட்டன.


