News April 1, 2025
கோவை: கடன் தொல்லையை நீக்கும் கால சம்ஹார பைரவர்!

பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியில் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் அமைந்துள்ளது ஆத்மநாதவனம். இங்கு சமுக்தியாம்பிகை, கால சம்ஹார பைரரவ், சரபேஸ்வரர் அகியோர் தனித் தனி சன்னதியில் அருள்பாளிக்கின்றனர். இங்குள்ள சக்திவாய்ந்த கால சம்ஹார பைரவரை, பூசணி தீபம், பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கிவிடுமாம். கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை Share பண்ணுங்க.
Similar News
News November 6, 2025
கோவை இளம் பெண்ணை இழிவு படுத்திய நபர் கைது!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவரை கார்த்திக் என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாக பேசியும் அவரை கண்டந்துண்டமாக வெட்ட வேண்டும் என்று வீடியோ வெளியிட்டார். இது குறித்து இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இன்று கார்த்திகை காவல்துறையினர் கைது செய்தனர்.
News November 6, 2025
கோவையில் பெண்ணிடம் ஆசை காட்டி மோசடி

சரவணம்பட்டியில் தனியார் நிறுவனம் நடத்தும் பெண்ணிடம் இரட்டை லாபம் தருவதாக கூறி ரூ.10 லட்சம் ஆன்லைன் மூலம் மோசடி செய்தனர். பின் அவர் கோவை சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், தென்காசி சென்று மோசடி செய்த ராஜு (41), முகமது அனீப் (44), அவருடைய மனைவி அன்னு (34) ஆகியோரை கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் என கோவை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
News November 6, 2025
கோவை மாணவி வன்கொடுமை: 59 இடங்களில் தீவிர ரோந்து!

கோவை சர்வதேச விமான நிலையம் அருகே மாணவி பாலியல் வன்கொடுமை
செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, கோவை மாநகரில் உள்ள 59 வெறிச்சோடிய இடங்களை போலீசார் அடையாளம் கண்டு கண்காணிப்பு திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, மாலை மற்றும் இரவு நேரங்களில் இவ்விடங்களில் ரோந்து அதிகரிக்க, அதிகாரிகள் டார்ச், சைரன், தடியுடன் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


