News April 15, 2024
கோவை: ஒரு டன் இளநீரின் பண்ணை விலை உயர்வு

ஆனைமலை தாலுகா பகுதியில் இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்ந்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இளநீர் வரத்து தொடர்ந்து குறைவாக உள்ளது என்பதால், குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வாரத்தை விட ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு 38 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு டன் இளநீரின் விலை ரூ.15000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
இஸ்ரோ தலைவர் கோவையில் பேட்டி

கோவை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன், ககன்யான் திட்டத்தில் 85% சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதை தெரிவித்தார். டிசம்பரில் ஆளில்லா ராக்கெட் வயோமித்ராவுடன் ஏவப்படும் என்றும், 2027 மார்சில் மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என்றார். மேலும் சந்திரயான்-4 திட்டத்தில் நிலவில் மாதிரிகளை சேகரிக்க, AI ரோபோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
News September 18, 2025
கோவை மக்களே: அரிய வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், கோவை மாவட்டத்தில் தொழில் முனைவோராக விருப்பமுள்ள 18 – 45 வயதிற்குட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, ஆடைகளை பயன்படுத்தி பைகள் தயாரிக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விபரங்களுக்கு 70129 55419, 89405 67882 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
கோவை அருகே பயங்கர விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

கோவை உக்கடத்திலிருந்து, பொள்ளாச்சி, பழனி வழியாக, மதுரை செல்லும் அரசு பேருந்து, இன்று அதிகாலை சென்றுள்ளது. பொள்ளாச்சி சாலையில் ஆச்சிபட்டி அருகே சென்றபோது, சாலையோரம் நின்ற டேங்கர் லாரியின் பக்கவாட்டில் எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மோதியுள்ளது. இதில் நடத்துநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 30 பயணிகள் படுகாயமடைந்து பொள்ளாச்சி மற்றும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.