News March 22, 2025
கோவை: எஸ்.பி கார்த்திகேயன் கடும் எச்சரிக்கை

கோவை எஸ்.பி கார்த்திகேயன் இன்று விடுத்த செய்தி குறிப்பில், சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212, வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதில் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News March 24, 2025
தண்ணி லாரி, டிராக்டர் உரிமையாளர்கள் கவனத்திற்கு

கோவையில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பிக் கொடுக்க, மேல்நிலைத்தொட்டிகள் கட்டி, 24 மணி நேரமும் அரசு அனுமதிக்கும் கட்டணத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து தண்ணீர் லாரி மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் தங்களது விபரங்கள் மற்றும் நாளொன்றுக்கு தேவையான தண்ணீர் விபரத்தை, cityengineer.coimbatore@gmail.com, Whatsapp No: 99440-64948 வாயிலாக தெரிவிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
News March 24, 2025
போஸ்ட் ஆபீஸ் வேலை: நீங்க பாஸா

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் நிரப்பப்படும் போஸ்ட் ஆபீஸ்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு மொத்தம் 21,413 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் கோவை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. <
News March 24, 2025
ஹெல்மெட் போட்டாதான் அனுமதி

கோவை கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழையும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. கோவை அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் மனு அளிக்க இருசக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.