News May 7, 2025
கோவை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கோவை, கரும்புக்கடை சேர்ந்தவர் சுமையா பானு (22). இவருக்கு திருமணம் முடிந்த பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இவரது மாமனார் வீட்டில், அதிக வேலை செய்ய வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று சுமையா பானு தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கை விரக்தி அடைந்த சுமையா பானு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 9, 2026
கோவை: திடீர்’னு பெட்ரோல் காலியா? இத பண்ணுங்க!

கோவை மக்களே ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின்<
News January 9, 2026
கோவை வரும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின்

தேசிய தலைவராக பொறுப்பேற்றதுமே புதுச்சேரி செல்லும் வழியில் கடந்த மாதம் தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் இரண்டாவது முறையாக நாளை (ஜன.10) தமிழகம் வருகிறார். நேரடியாக கோவை வரும் அவருக்கு விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். நாளை மாலை கோவை வந்தடையும் அவர் இரு நாட்கள் தங்கியிருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
News January 9, 2026
கோவை: பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் இனி What’s App-ல்

கோவை மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். (ஷேர் பண்ணுங்க).


