News March 21, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (21.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News March 22, 2025
கோவையில் போக்குவரத்து மாற்றம்

சேலம் – கொச்சின் சாலை ஒட்டியுள்ள மரப்பாலத்தில் அமைந்துள்ள, ரயில்வே கீழ் பாலத்தை, திரும்பக்கட்டும் பணி நடைபெற்று வருவதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து க.கா. சாவடி, வாளையாறு மற்றும் பாலக்காடு செல்லும் கனரக வாகனங்கள், ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து, இடது புறம் திரும்பி, கற்பகம் காலேஜ் சந்திப்பில் செல்ல வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளனர்.
News March 22, 2025
கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

கோவையில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், இன்று மாவட்டத்தின் சில பகுதிகளில், மாலை 6 மணி வரை, கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
News March 22, 2025
கோவை வரும் தமிழக ஆளுநர்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வரும் 25ஆம் தேதி கோவை வருகிறார். கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 45வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிப்பு செய்கிறார். இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் காவல்துறை சார்பில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழங்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.