News March 15, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (15.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News March 16, 2025

சொத்து வரி செலுத்த இன்று சிறப்பு முகாம்

image

கோவை மாநகராட்சியில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை, சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. 2024-25 நிதியாண்டில் ரூ.473.77 கோடி வசூலிக்க வேண்டும். நேற்று வரை, ரூ.398.20 கோடி வசூலாகி உள்ளது. இன்னும் ரூ.75.57 கோடி வசூலிக்க வேண்டியிருக்கிறது. இத்தொகையை வசூலிக்க மாநகராட்சியில் இன்று சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் வரியை செலுத்த, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தி உள்ளார்.

News March 16, 2025

கோவையில் பாலியல் தொழில்!

image

கோவை சுந்தராபுரம் பகுதியில், அழகிகளை வைத்து, பாலியல் தொழில் நடைபெறுவதாக சுந்தராபுரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில், தகவல் கிடைத்த இடத்தில், காவல்துறையினர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த, ராஜிவ் (30), மும்தாஜ் (38), ஜெய் ஸ்ரீ (23), துர்கா (19) உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 16, 2025

கோவையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு!

image

கோவையில் சாலை விதி மீறல்கள், விபத்துகளை தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் காவல்துறை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகரில், இரவு நேரங்களில், ஒன்வே மற்றும், அதிவேகமாக வாகனங்களில் வருபவர்கள், கண்காணிக்கப்பட்டு, அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதியப்படும். மேலும் விபத்தை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

error: Content is protected !!