News April 24, 2025
கோவை: இந்திய ராணுவத்தில் சேர நாளை கடைசி!

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு நாளை(ஏப்.25) கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு முற்றிலும் வெளிப்படையானது. மோசடி ஏஜென்ட்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். SHARE IT!
Similar News
News September 18, 2025
கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (செப்.18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, சிட்கோ, சுந்தராபுரம், போத்தனூர், ஈச்சனாரி, குறிச்சி, எல்.ஐ.சி காலனி, குறிச்சி ஹவுசிங் யூனிட், மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி, சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் ஒரு பகுதி, ஆகிய பகுதிகள் மின் வினியோகம் இருக்காது.
News September 18, 2025
நாலாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு

கோவை சிங்காநல்லூர் சேர்ந்தவர் விவேகன் மணி (72) பெயிண்டிங் வேலை செய்து வந்தார் .இவர் நேற்று காந்திபுரம் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார் 4 அடி உயர ஸ்டாண்டில் நின்று பெயிண்ட் அடிக்கும் போது திடீரென்று தவறி கிழே விழுந்து உயிரிழந்தார் பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 17, 2025
கோவை பெரியார் படிப்பகத்தில் பீப் பிரியாணி விருந்து.

பெரியாரின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் ‘கரப்பான் பூச்சி’ யூடியூப் குழுவினர் சார்பில் பீப் பிரியாணி விருந்து நடைபெற்றது. இந்த விருந்தினை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு பிரியாணி பரிமாறினார். நிகழ்வில் பீப் பிரியாணி, பீப் கிரேவி மற்றும் பீப் பப்ஸ் ஆகியவை வழங்கப்பட்டன.