News January 23, 2025
கோவை: ஆணவப் படுகொலை வழக்கில் தீர்ப்பு

கோவை மேட்டுப்பாளையத்தில், 2019ஆம் ஆண்டு, வேறு சமூக பெண்ணை திருமணம் செய்ததால், வினோத் குமார் என்பவர், தனது சொந்த தம்பியான கனகராஜ், அவரது மனைவி தர்ஷினி பிரியாவை, வெட்டி படுகொலை செய்தார். கோவையையே உலுக்கிய இந்த வழக்கில், வினோத் குமார் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. வினோத் குமாருக்கு மரண தண்டனை வரை கொடுக்கப்படலாம் என்பதால், வரும் 29ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.
Similar News
News December 5, 2025
கோவையில் பாலியல் தொழில்: 4 பேர் கைது

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக பந்தய சாலை காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. இத்கவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட நிவேதா, ஜீனத் பேகம், லீனா, நசீர் உசேன் ஆகியோர்களை கைது செய்தனர்.

கோவையில் 200 பேர் மீது குண்டாஸ்

கோவை மாநகரில் இவ்வாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 200 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ரவுடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த போலீசார் தீவிரமாக கண்காணித்து, ஜாமீனில் வெளியே வந்து அச்சுறுத்தும் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 50% அதிகம் என கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.