News June 26, 2024
கோவை ஆட்சியர் எச்சரிக்கை

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவர்கள் மற்றும் ஸ்கேன் மைய நிர்வாகிகளுக்கான கூர் உணர்திறன் பயிற்சி, நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரியப்படுத்தக் கூடாது என எச்சரித்தார்.
Similar News
News November 14, 2025
கோவை: மனைவியை கொன்று நாடகமாடிய கணவர்!

கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கவி சரவணகுமார், மனைவி மகேஸ்வரியை ஓட்டுநர் சுரேஷ் கடந்த (அக்.28) ஆம் தேதி கொலை செய்து தடாகம் போலீசில் சரணடைந்தார். பின் விசாரணையில் அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கவி சரவணகுமார் தான் கொலை செய்ய வைத்ததாக தெரிய வந்தது. பின் போலீசார் கவி சரவணகுமாரையும் தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 14, 2025
கோவை: திறம்பட செயல்பட்ட 51 காவலர்களுக்கு பாராட்டு

கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கொலை, கொள்ளை, திருட்டு, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் திறம்பட செயல்பட்ட 51 காவலர்களை பாராட்டி, அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். கூட்டத்தில், கோவை புறநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல்துறையினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
News November 13, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (13.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


