News January 23, 2025
கோவை ஆட்சியருக்கு விருது

மக்களவை தேர்தல் பணி, கோவை மாவட்டத்தில் அமைதியாக நடந்தது. தேர்தல் பணியை சிறப்பாக மேலாண்மை செய்ததற்காகவும், ஓட்டுப்போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும், சிறந்த மாவட்ட தேர்தல் அலுவலராக, கோவை கலெக்டர் கிராந்திகுமாருக்கு விருது வழங்கப்படுகிறது. வரும், 25ல் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ரவி, வழங்குகிறார்.
Similar News
News November 22, 2025
கோவை வரும் CM ஸ்டாலின்

வரும் நவ.25, 26 ஆகிய தேதிகளில் கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்கிறார். நவ.25-ம் தேதி கோவை மாவட்டத்தில் செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்து தொழில்துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் . முதலமைச்சர் முன்னிலையில் பல தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. முதல்வர் வருகைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
News November 22, 2025
கோவை அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முந்தினம் துடியலூர் – சரவணம்பட்டி சாலையில் தனது டூவீலரில் சென்ற போது, எதிரே வந்த லாரி மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News November 22, 2025
கோவை: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு!

கோவை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க!


