News April 11, 2025

கோவை அருகே விபத்து: 2 பேர் பலி

image

சிறுமுகையை அடுத்த ஆலங்கொம்பு பகுதியில் நேற்று இரவு ஆட்டோ ஒன்று பெண் பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அதேவேளையில் ஒரே டூவீலரில் 4 இளைஞர்கள் சென்றுள்ளனர். அசுர வேகத்தில் சென்ற டூவீலர் ஆட்டோ மீது மோதியதில், 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இருவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News September 18, 2025

கோவை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கோவை மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 18, 2025

கோவையில் கொடூரக் கொலை: அதிரடி கைது!

image

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி, யாசகர் ஒருவர் மரக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆர்.எஸ்.புரம் போலீசார், விசாரணை மேற்கொண்டதில், இறந்தவர் சீனிவாசன் என்பதும், மற்றொரு யாசகர் வேல்முருகன், அவரை கொலை செய்துவிட்டு தப்பி சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து கோவையில் பதுங்கி இருந்த வேல்முருகனை, நேற்று ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்தனர்.

News September 18, 2025

கோவையில் ட்ரெண்டாகும் AI புகைப்படம் எச்சரிக்கை!

image

கோவை மாநகர காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “Google Gemini” பெயரில் வைரலாகும் “Nano Banana AI” ட்ரெண்ட் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி போலியான இணையதளம், செயலிகள் மூலம் புகைப்படம், தனிப்பட்ட விவரங்கள் பதிவேற்றினால், வங்கி கணக்கு போன்ற தனிநபர் தகவல்கள் திருடப்படலாம் என, கோவை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

error: Content is protected !!