News April 23, 2025
கோவை: அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.
Similar News
News December 2, 2025
கோவைக்கு விடுமுறை: எழுந்த கோரிக்கை!

கோவையில் நாளை கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் தீப திருநாளன்று விடுமுறை அறிவித்திருப்பது போல் கோவையிலும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டி இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பாக மாநில பொறுப்பாளர் சூர்யா தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (டிசம்பர்.1) மனு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
News December 2, 2025
கருமத்தம்பட்டி அருகே 16 பேர் அதிரடி கைது!

கருமத்தம்பட்டி அருகே கொள்ளுப்பாளையம் பகுதியில், கருமத்தம்பட்டி போலீசார் வழக்கமாக ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு தென்னந்தோப்பு பகுதியில் சேவல் சண்டையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்து, 2 சேவல்கள், ரொக்கப் பணம் ரூ.9700, 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
News December 2, 2025
பைக் ரேசிங்கில் சாதித்த மாணவிக்கு எம்எல்ஏ பாராட்டு

தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இளையோர் பைக் ரேசிங் போட்டியின் மாவட்ட அளவில் தகுதிச் சுற்றில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி சஞ்சனா ஶ்ரீ 2-ஆம் இடம் பெற்று சிறப்புடன் தேர்வாகியுள்ளார். இதன் காரணமாக, அச்சிறுமியை இன்று (டிச.1) கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து, அச்சிறுமியின் சாதனையை பாராட்டி, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.


