News August 10, 2024
கோவை- அபுதாபி நேரடி விமான சேவை துவக்கம்

கோவை-அபுதாபி இடையே நேரடி விமான சேவை இன்று(10.8.24) காலை தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை 6.40-க்கு அபுதாபியில் இருந்து கோவை வந்த விமானத்தில், 163 பேர் பயணித்தனர். பின்னர், மீண்டும் காலை 7.30 மணிக்கு கோவையில் இருந்து 168 பயணிகளுடன் விமானம் அபுதாபி புறப்பட்டு சென்றது.
Similar News
News October 21, 2025
மேட்டுப்பாளையத்தில் ஆண் சடலம் மீட்பு!

மேட்டுப்பாளையத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் அருகே முதியவர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் ஜிஎச் அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் இறந்த முதியவர் மேட்டுப்பாளையம் வெள்ளிப்பாளையத்தை சேர்ந்த அய்யாசாமி என்பதும், மயங்கி விழுந்து உயிரிழந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
News October 21, 2025
வால்பாறையில் தொடரும் அவலம் கண்டுகொள்ளுமா அரசு?

கோவை வால்பாறையில், கல்லார்குடி, சங்கரன்குடி, உடுமன்பாறை, பாலகணாறு, நெடுங்குன்றம் உள்ளிட்ட, 13 செட்டில்மென்ட் பகுதிகளில், பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். ஆனால் இங்கு ரோடு, மின்சாரம், நடைபாதை, வீடுகள் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கண்டுகொள்ளுமா அரசு?
News October 21, 2025
கோவை : உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

கோவை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <