News March 21, 2024
கோவை அதிமுக வேட்பாளர் இவர் தான்

கோவை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
Similar News
News November 13, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ் கணுவாய், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 13, 2025
கோவை வரும் பிரதமர் மோடி!

தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், வரும் நவம்பர் 19ஆம் தேதி அன்று கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இயற்கை வேளாண் மாநாடு நடைபெற உள்ளது. இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். மேலும், இந்த மாநாட்டின் போது பிரதமர் வேளாண் விஞ்ஞானிகளை சந்திக்கிறார்.
News November 12, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (12.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


