News April 22, 2025

கோவை: அங்கன்வாடி மையங்களில் வேலை!

image

கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 137 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை<> www.icds.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.

Similar News

News November 22, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (22.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 22, 2025

கோவை வரும் CM ஸ்டாலின்

image

வரும் நவ.25, 26 ஆகிய தேதிகளில் கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்கிறார். நவ.25-ம் தேதி கோவை மாவட்டத்தில் செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்து தொழில்துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் . முதலமைச்சர் முன்னிலையில் பல தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. முதல்வர் வருகைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News November 22, 2025

கோவை அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முந்தினம் துடியலூர் – சரவணம்பட்டி சாலையில் தனது டூவீலரில் சென்ற போது, எதிரே வந்த லாரி மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!