News August 15, 2024
கோவையில் 2500 போலீசார் பாதுகாப்பு

நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை வஉசி மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தேசிய கொடியேற்றி காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறாா். தியாகிகளை கெளரவிப்பதுடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளாா். இதனையொட்டி மாநகரில் 1700, புறநகரில் 800 என மொத்தமாக 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News November 23, 2025
கோவையில் கவனத்தை ஈர்த்த படைப்புகள்

கோவை விழாவின் பகுதியாக அரசு கலைக்கல்லூரியில் நடக்கும் Art Street நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறது. 30-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஓவியர்கள் 9ம) கலைஞர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். கல்லில் வரையப்பட்ட ஓவியங்கள், களிமண் மற்றும் மினியேச்சர் கலைப்பாடல்கள், குழந்தைகளின் செயற்பாடுகள் ஆகியவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

News November 22, 2025
TNAU-வில் 2 நாள் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி (25.11.2025 மற்றும் 26.11.2025) ஆகிய 2 நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 94885-18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.