News August 16, 2024
கோவையில் 191 நிறுவனங்கள் மீது நடவடிக்கை.

கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேசிய விடுமுறை தினமான நேற்று (ஆக.15) கோவை மாவட்டத்தில் கடைகள், தொழில் நிறுவனங்கள் என 230 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 92 கடைகள், நிறுவனங்கள், 99 உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 191 உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News October 19, 2025
மருதமலை கந்த சஷ்டி விழா அறிவிப்பு

கோவை மருதமலை சுப்பிரமணியர் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் அக்டோபர் 22 முதல் 28 வரை நடைபெற உள்ளது. தினமும் யாகசாலை அபிஷேகங்கள், திருவீதியுலா நடைபெறும். அக்டோபர் 27 அன்று சூரசம்ஹாரம், 28 அன்று திருக்கல்யாணம் நடைபெறும். இந்நாள்களில் வாகனங்களில் மலை ஏற அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 18, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (18.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 18, 2025
கோவைக்கு ஆரஞ்ச் அலார்ட்: மக்களே உஷார்!

தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், கோவை மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று கோவை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் ஆலார்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.