News November 17, 2024

கோவையில் விரைவில் வருகிறது ‘டேக் முறை’?

image

கோவை அரசு மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் டாக்டரிடம் ஒரு வாலிபர் அத்துமீற முயன்றார். அப்போதே, மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம், மாநகர போலீசார், வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கோவை அரசு மருத்துவமனையில், ‘டேக் முறை’ அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக, டீன் நிர்மலா நேற்று தெரிவித்தார்.

Similar News

News November 19, 2024

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: 53 மனுக்கள் பெறப்பட்டன

image

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலையில், மேயர் கா.ரங்கநாயகி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் 53 கோரிக்கை மனுக்கள் மக்கள் அளித்தனர். அதை பெற்ற மேயர் உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

News November 19, 2024

கோவை: அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

2024-2025 ஆம் நிதியாண்டில் கோவை மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி இவ்விருதுக்கு தகுதியான நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் (22.11.2024)-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

பெண் எஸ்பிக்கு மிரட்டல்: கோவை விசிக தலைவர் கைது

image

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண் கூடுதல் காவல் கண்காணிப்பாளரை, செல்போனில் அழைத்து தகாத வார்த்தையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் அசோக் குமாரை கைது செய்துள்ள காவல்துறையினர் இது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.