News August 25, 2024
கோவையில் வாடகை தாயாக 10 பேர் விண்ணப்பம்

கோவை மாவட்டத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற கடந்த ஓராண்டில் 10க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கோவையில் உள்ள 6 செயற்கைக் கருத்தரித்தல் மையங்களில் வாடகைத்தாய் நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கோவை மாவட்ட சுகாதாரத் துறை, மருத்துவம் மற்றும் ஊர்க் நலப்பணிகள் இணை இயக்குநர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 9, 2026
கோயம்புத்தூரை அதிர வைத்த கொலை

கோவையைச் சேர்ந்தவர் ஐயப்பன் (எ) பிரவீன் குமார் (24). மைசூரில் வேலை செய்து வந்த இவர் நேற்று முன் தினம் கோவைக்கு வந்துள்ளார். அப்போது கெம்பட்டி காலணியில் நண்பர்களுடன் சேர்ந்து முட்புதரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் இவரை கல்லால் அடித்து கொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News January 9, 2026
POWER CUT: கோவையில் எங்கெல்லாம் மின்தடை

கோவையில் இன்று (ஜன.9) மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன், வி.எம்.டி. நகர், ஆசிரியர் காலனி, நமீதா காலனி. கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் பகுதியில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News January 9, 2026
கோவை அருகே சோக சம்பவம்!

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (67). இவர் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாகவே அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், நேற்று முந்தினம் வாழ்க்கையில் விரக்தி அடைந்து, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


