News August 2, 2024
கோவையில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை

கோவை, சரவணம்பட்டியை சேர்ந்தவர் வழக்கறிஞர் உதயகுமார். இவரை காரில் அழைத்து வந்த மர்ம நபர்கள் செட்டிப்பாளையம் அடுத்த மயிலேறிபாளையம் பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டினர். இதில் அதிக இரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உதயகுமார் உயிரிழந்ததார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 1, 2025
கோவை: +2 போதும் ரயில்வேயில் சூப்பர் வேலை!

கோவை மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க், ரயில் கிளார்க், எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <
News December 1, 2025
கோவை: செருப்படி ஓடை பற்றி தெரியுமா?

கோவை மேற்கு தொடர்ச்சிமலையில் உருவாகி ராமநாதபுரம் வழியாக நொய்யல் ஆற்றில் கலக்கும் சங்கனூர் ஓடையே, முன்பு ஒரு காலத்தில் செருப்படி ஓடை என அழைக்கப்பட்டது. முன்பு இந்த ஓடையில் கொள்ளையர்கள் இருந்தார்களாம். அவர்கள் இந்த ஓடை வழியாக செல்லும் வண்டிகள், மணலில் சிக்கிக்கொள்ளும்போது, செருப்பால் மக்களை தாக்கி, அவர்களிடம் உள்ள நகை, பணத்தை பரித்து செல்வார்களாம். இதனால் இந்த ஓடைக்கு செருப்படி ஓடை என பெயர் வந்தது.
News December 1, 2025
கோவை: மனைவியை கொன்று What’s App-ல் ஸ்டேட்டஸ்!

நெல்லையை சேர்ந்த பாலமுருகன் கோவையில் தனியார் தங்கும் விடுதியில் இருந்த மனைவி ஸ்ரீபிரியாவை நேற்று தனியார் விடுதியில் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். அங்கிருந்த நாற்காலியில் கால் போட்டு அமர்ந்து செல்பி எடுத்து அதனை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் துரோகத்தின் சம்பளம் மரணம் என வைத்துள்ளார். போலீஸ் வரும் வரை அங்கேயே இருந்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


