News August 25, 2024
கோவையில் வரி வசூலிக்க புது டெக்னிக்

கோவை மாநகராட்சியில் டிரோன்கோ மூலமாக வார்டு வாரியாக அனைத்து கட்டடங்களும் ஆய்வு செய்யப்பட்டு, சொத்து வரி மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. ஏராளமான ஓட்டு வீடுகள் இடிக்கப்பட்டு புது கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால், சொத்து வரியை மாற்றியமைக்கவில்லை. முதல்கட்டமாக ரூ.100 சொத்து வரி செலுத்தும் வரி விதிப்புதாரர்கள் கட்டடம் எவை என பில் கலெக்டர்கள் மூலம் கள ஆய்வு செய்ய மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 7, 2025
கோவை: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை!

கோவை மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள, ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட 2569 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு வேலைக்கு ஏற்ப டிப்ளமோ, பிஎஸ்சி பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.10ம் தேதிக்குள், <
News December 7, 2025
கோவையில் அதிர்ச்சி: 5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. அதில் இறந்தவர்கள் 1,13,861, வீட்டில் ஆள் இல்லாதவர்கள், இடம் மாறியவர்கள், இரட்டை வாக்குரிமை 3,92,533 என மொத்தமாக 5,06,394 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 7, 2025
கோவையை உலுக்கிய சம்பவம்: பாய்ந்த குண்டாஸ்

கோவையில் விமான நிலையம் பின்புறம் சில தினங்களுக்கு முன்னர் மாணவி ஒருவர் மூவர் கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் கருப்பசாமி, கார்த்தி, தவசி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். மூவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதன் பேரில் இன்று போலீசார் கைது செய்தனர்.


