News April 24, 2025
கோவையில் ரயில் சேவைகள் மாற்றம்

கோவை ரயில்வே துறை அதிகாரிகள் இன்று வெளியிட்ட அறிக்கையில், இருகூர் ரயில்வே யார்டில் தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 26, 28 ஆகிய தேதிகளில், ரயில் சேவையில் மாற்றம், அதில் திருச்சிராப்பள்ளி சந்திப்பு – பாலக்காடு ரயில் மதியம் 13.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சூலூர் சாலையில் நிறுத்தப்படும் என்றனர்.
Similar News
News November 16, 2025
சிலம்பம் போட்டியில் வெள்ளி வென்ற கோவை மாணவி!

கோவை மாநகர் மாவட்ட திமுக அலுவலகத்தில், இன்று (நவ.15) மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், 2- ஆம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்ற +1 மாணவி ரித்திகாவை, மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை. செந்தமிழ் செல்வன் நேரில் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வில், மாணவியின் தந்தை ராமன், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் பிரின்ஸ், தொண்டர் அணி பகுதி துணை அமைப்பாளர் முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
News November 15, 2025
கோவை மாவட்டத்தின் வானிலை நிலவரம்

கோவை வானிலை நிபுணர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் கோவை மாவட்டத்தில் நாளை நாளை கோவையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை: அதிகபட்சம் 31°C, குறைந்தபட்சம் 22°C என்ற அளவில் பதிவாகும். திங்கள் கோவை மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. என்று தெரிவித்துள்ளனர்
News November 15, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (15.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


