News April 20, 2025
கோவையில் யானை தாக்கி முதியவர் பலி!

கோவை, காளம்பாளையம், தாயனூர் தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(60). இவர் சொந்தமாக ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு, பின் மாலை மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது, புதர் மறைவில் மறைந்திருந்த குட்டியுடன் கூடிய ஒற்றை காட்டு யானை தாக்கியதில் அவர் பலியானார். இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 15, 2025
கோவை மத்திய சிறை கைதி உயிரிழப்பு!

கோவை திருச்சி ரோடு பழைய சுங்கம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(39). தொழிலாளியான இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் இவருக்கு திடீரென நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிறை மருத்துவமனையில் பார்த்த போது எச்ஐவி பாதிப்பு இருந்தது தெரிந்தது. தொடர்ந்து கோவை ஜி எச்சில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 15, 2025
கோவையில் இப்பகுதியில் மின்தடை

கோவையில் இன்று (டிச.15) பல்வேறு பகுதியில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பட்டணம் புதூர், கம்பன் நகர், நொயல் நகர், சத்தியநாராயணபுரம், பள்ளபாளையம் EB அலுவலகம், கரவலி சாலை, நாகமாநாயக்கன் பாளையம், காவேரி நகர், காமாட்சிபுரம், பாப்பம்பட்டி ஆகிய பகுதியில் மின்விநியோகம் இருக்காது.