News June 28, 2024
கோவையில் மழைக்கு வாய்ப்பு

கோவை உட்பட 7 மாவட்டங்களில் இன்று(ஜூன் 28) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்பு என தகவல்.
Similar News
News October 20, 2025
கோவையில் பரபரப்பு: சடலம் மீட்பு!

கோவை வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் நேற்று முந்தினம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலையில் அடிபட்டு உயிரிழந்த கிடந்துள்ளார். பின்னர் இது குறித்த பகுதி மக்கள் வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை மீட்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 20, 2025
கோவையில் நிலம் வாங்க போறிங்களா?

1.நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா (அ) புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும்., 2.அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும், 3.மேலும், பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம், 4.பட்டாவுடன் ஆதார் இணைக்க, <
News October 20, 2025
கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 40 ‘ஏஐ கண்கள்’!

கோவை அவினாசி சாலையில் உள்ள ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில், அதிவேக வாகனங்களால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க, ஏஐ தொழில்நுட்பத்தில் 40 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேம்பாலத்தில் வேகக் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகளைக் கண்காணிக்கவும், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் இந்த கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.