News August 18, 2024

கோவையில் மழைக்கு வாய்ப்பு

image

கோவை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News December 19, 2025

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம், மேட்டுப்பாளையம் சாலை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், ரங்கநாதபுரம், சூலூர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, அன்னூர், சொக்கம்பாளையம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 19, 2025

ஸ்தம்பிக்கும் கோவை! இங்கு செல்ல தடை

image

கோவை ஒப்பணக்கார வீதி நகைக்கடை, ஜவுளிக்கடை, எலக்ட்ரானிக்ஸ் என வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இங்கு கனரக வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ஒப்பணக்கார வீதியில் கனரக வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

News December 19, 2025

கொடிசியா மைதானத்தில் கடற்கரை எக்ஸ்போ

image

கோவையில் கொடிசியா மைதானத்தில் குளிரூட்டப்பட்ட அற்புதப் பொழுதுபோக்கு நிகழ்வு (கடற்கரை எக்ஸ்போ) தொடங்குகிறது. இந்நிகழ்வை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று துவக்கி வைக்கவுள்ளார். குடும்பத்தோடு பொழுதைப் போக்க சிறந்த இடமாக அமைந்துள்ள இந்நிகழ்வில், 250 அடி நீளக் கடற்கரை காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

error: Content is protected !!