News April 3, 2025
கோவையில் போக்குவரத்து மாற்றம்

கோவை மருதமலைகோவில் திருக்குட விழா நாளை (ஏப்.4) தேதி நடைபெற இருப்பதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அதில் மருதமலை வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை வடவள்ளி, தொண்டாமுத்தூர் சந்திப்பு வழியாக, மகாராணி அவென்யூ, மருதமலை ரோடு சந்திப்பை அடைந்து, இடது புறம் திரும்பி, பாரதியார் பல்கலைக் கழகம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். (SHARE பண்ணுங்க)
Similar News
News April 5, 2025
முதல்வரின் பயண விபரம் வெளியீடு

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்.5) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் 11.10 மணிக்கு கோவை வருகிறார். அங்கிருந்து 11:30 மணியளவில் மேட்டுப்பாளையம் புறப்படுகிறார். 12 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் அவருக்கு திமுகவினர் வரவேற்பும், தொடர்ந்து தனியார் ஹோட்டலுக்கு 12.15 மணியளவில் செல்கிறார். பின், அங்கிருந்து 4:30 மணிக்கு ஊட்டி செல்ல உள்ளார்.
News April 4, 2025
கோவைக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, கோவை மாவட்டத்தில் இன்று(ஏப்.4) பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 3, 2025
மருதமலையில் இப்படி ஒரு ரகசியமா?

மருதமலை முருகனை தரிசிக்க பலமுறை நாம் சென்றிருப்போம். ஆனால் மலையேறும் வழியில் ஒரு ரகசியம் இருப்பது உங்களுக்கு தெரியுமா. ஆம், மலையில் 18ம் படியை கடந்தால் மலைச்சாரலில் 3 கற்கள் மாறுபட்ட நிறத்தில் இருக்கும். அந்த 3 கற்களும் 3 திருடர்களாம். மருதமலையில் உண்டியலை திருடி சென்றபோது, அவர்களை பிடித்த முருகன், ‘ நீவிர் கற்சிலைகளாக கடவீர்’ என சபித்தாராம். இதனால் அந்த திருடர்கள் சிலையானார்களாம். Share பண்ணுங்க.