News March 22, 2025
கோவையில் போக்குவரத்து மாற்றம்

சேலம் – கொச்சின் சாலை ஒட்டியுள்ள மரப்பாலத்தில் அமைந்துள்ள, ரயில்வே கீழ் பாலத்தை, திரும்பக்கட்டும் பணி நடைபெற்று வருவதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து க.கா. சாவடி, வாளையாறு மற்றும் பாலக்காடு செல்லும் கனரக வாகனங்கள், ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து, இடது புறம் திரும்பி, கற்பகம் காலேஜ் சந்திப்பில் செல்ல வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளனர்.
Similar News
News March 28, 2025
ஓய்வூதியர் குறைகளைவுக் கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று ஓய்வூதியர் குறைகளைவுக் கூட்டம் அரசு செயலாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பவன்குமார், கருவூலத்துறை மண்டல இணை இயக்குநர் பாலமுருகன், மாவட்ட கருவூல அலுவலர் குமரேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நிறைமதி, என பலரும் கலந்து கொண்டனர்.
News March 28, 2025
வேளாண்மை பல்கலையில் வேலை

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக வாக்-இன் (Walk-IN) வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு நேர்காணல் ஏப்.3ஆம் தேதி நடைபெறவுள்ளது. சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.58,000 வழக்கப்படும். மேலும், விவரங்களுக்கு <
News March 28, 2025
மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: ஒடிசா இளைஞர் கைது

கோவில்பாளையத்தில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஒடிசா இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவில்பாளையம் அண்ணா நகர் பகுதியில், பொன்னுத்தாய்(65) என்ற மூதாட்டிக்கு, அதே பகுதியில் கட்டட வேலை செய்து வந்த, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சமீர் மாலிக்(23) என்பவர், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அவரை கோவில்பாளையம் போலீசார் கைது செய்தனர்.