News March 15, 2025

கோவையில் பாடுவது மிகவும் மகிழ்ச்சி: ஹாரிஸ் ஜெயராஜ்

image

கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் இன்று (மார்ச்.15)  “Rocks on Harris” என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து நேற்று ஹாரிஸ் ஜெயராஜ் செய்தியாளர் சந்திப்பில், 36 பாடல்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு தொடங்கி இருப்பதாகவும் கோவையில் பாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

Similar News

News March 15, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (15.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 15, 2025

அரசாணையை திரும்பப்பெற்றது தமிழக அரசு!

image

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற, அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில் உண்டியல் காணிக்கையில் இருந்து, ஊட்டியில் ரிசார்ட் கட்டுவதற்கான, அரசாணை ஒன்றினை, தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு தொடர்ந்த நிலையில், அந்த அரசாணை வாபஸ் பெற்றது தமிழக அரசு. மேலும், கோவில் நலனுக்கு மட்டுமே செலவிட வேண்டுமென உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

News March 15, 2025

மெட்ரோ ரயில் சேவை: மக்கள் மகிழ்ச்சி

image

சட்டசபையில் நேற்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கோவை மாநகரில் அவினாசி சாலை – சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் ரூ.10.740 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கை மத்திய அரசின் மூலதன பங்களிப்பு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான பணி தொடங்கப்படும் என்றார். இந்த அறிவிப்பால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!