News March 3, 2025

கோவையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கோவை அரசு கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நாளை (மார்ச் 04) நடைபெற உள்ள நிலையில், வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் நடைபெற இருக்கும் இந்த முகாமில் 60க்கு மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. எனவே இந்த வாய்ப்பினை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

Similar News

News October 20, 2025

கோவை: ஒப்பணக்கார வீதியில் பொதுமக்கள் கூட்டம்

image

தமிழகம் முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கடைசி நாள் என்பதால், கோவை ஒப்பணக்கார வீதியில், துணிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம், அலை மோதி வருகிறது. மேலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டு வருவதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News October 19, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (19.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 19, 2025

கோவையில் ஜாலியாகச் செல்ல சூப்பர் ஸ்பாட்!

image

தீபாவளிக்குவிடுமுறை கிடைத்துள்ள நிலையில் கோவை மக்கள் ஜாலியாக சுற்றுலா செல்ல 5 சூப்பரான ஸ்பாட்கள் பார்க்கலாம்.மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள வால்பாறை​, மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள பரளிக்காடு​, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அமைந்துள்ள கோத்தகிரி, சிருவாணி மலைப்பகுதியில் அமைந்துள்ள கோவை குற்றாலம் அருவி,மருதமலை முருகன் கோவில்​; வேறு ஏதேனும் சூப்பர் ஸ்பாட் இருந்தால் கமெண்ட் பண்ணுங்க

error: Content is protected !!