News August 14, 2024
கோவையில் நாளை பார்களை மூட உத்தரவு

கோவை கலெக்டர் கிராந்தி குமார்பாடி நேற்று கூறுகையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி (நாளை) சுதந்திர தினத்தையொட்டி கோவையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். டாஸ்மாக் மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் தனியார் பார்கள் அனைத்தையும் மூட உத்தரவிட்டார். விதிகளை மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
Similar News
News November 20, 2025
கோவையில் குப்பை அள்ளும் வண்டியில் வந்த உணவு

கோவை, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவில் கடந்த 15ஆம் தேதி தூய்மைப் பணிகளில் ஈடுபட்ட மாநகராட்சி பணியாளர்களுக்கு, உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்களை, குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டு வந்து விநியோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கு இது என தூய்மை பணியாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
News November 20, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (20.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
பள்ளிகளில் மனநல ஆலோசகர் அவசியம்: வானதி சீனிவாசன்

வால்பாறை அருகே 9-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று தனது முகநூல் பதிவில், குழந்தைகள் மனரீதியாகப் பாதுகாப்பாக இருக்க பள்ளிகளில் மனநல ஆலோசகர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


