News March 21, 2025
கோவையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக, வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே நகரின் சில பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக, பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கோவை மாவட்டத்தில் சில இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
Similar News
News March 22, 2025
கோவையில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவை கலெக்டர் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு ‘என் கல்லூரிக் கனவு’ உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி வளாக அரங்கில் (மார்ச்.30) அன்று நடைபெற உள்ளது. இதில் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 22, 2025
JOB: கோவையில் வேலை வாய்ப்பு

கோவை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 114 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 60,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க மார்ச்.24 கடைசி நாள் ஆகும். இதற்கு <
News March 22, 2025
கோவை: எஸ்.பி கார்த்திகேயன் கடும் எச்சரிக்கை

கோவை எஸ்.பி கார்த்திகேயன் இன்று விடுத்த செய்தி குறிப்பில், சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212, வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதில் அறிவுறுத்தியுள்ளார்.