News August 16, 2024
கோவையில் தொழில் தொடங்க கடன் உதவி

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ், கயிறு வாரியத்தின் வாயிலாக மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ், அதிகபட்ச திட்ட செலவு ரூ.50 லட்சம், உற்பத்தி மற்றும் வணிக சேவைத்துறைகளில் ரூ.20 லட்சத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் கயிறு வாரிய மண்டல அலுவலகம் துவங்கப்பட்ட பின் தொழிற்சாலைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கயிறு வாரிய மண்டல அலுவலர் சாபு தெரிவித்தார்.
Similar News
News September 18, 2025
கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (செப்.18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, சிட்கோ, சுந்தராபுரம், போத்தனூர், ஈச்சனாரி, குறிச்சி, எல்.ஐ.சி காலனி, குறிச்சி ஹவுசிங் யூனிட், மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி, சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் ஒரு பகுதி, ஆகிய பகுதிகள் மின் வினியோகம் இருக்காது.
News September 18, 2025
நாலாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு

கோவை சிங்காநல்லூர் சேர்ந்தவர் விவேகன் மணி (72) பெயிண்டிங் வேலை செய்து வந்தார் .இவர் நேற்று காந்திபுரம் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார் 4 அடி உயர ஸ்டாண்டில் நின்று பெயிண்ட் அடிக்கும் போது திடீரென்று தவறி கிழே விழுந்து உயிரிழந்தார் பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 17, 2025
கோவை பெரியார் படிப்பகத்தில் பீப் பிரியாணி விருந்து.

பெரியாரின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் ‘கரப்பான் பூச்சி’ யூடியூப் குழுவினர் சார்பில் பீப் பிரியாணி விருந்து நடைபெற்றது. இந்த விருந்தினை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு பிரியாணி பரிமாறினார். நிகழ்வில் பீப் பிரியாணி, பீப் கிரேவி மற்றும் பீப் பப்ஸ் ஆகியவை வழங்கப்பட்டன.