News November 23, 2024
கோவையில் தொடங்குகிறது சூர்யா பட ஷூட்டிங்

நடிகர் சூர்யா, அடுத்ததாக, நடிகர் ஆர்.ஜே பாலாஜி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 17-ம் தேதி பூஜையுடன் தொடங்குவதாக இருந்தது. நடிகர் த்ரிஷாவின் கால்ஷீட் பிரச்சினை காரணமாக தொடங்கவில்லை. இந்த நிலையில் இந்தப் படத்தின் பூஜை வரும் 27-ம் தேதி கோவையில் நடக்கிறது. 28-ம் தேதி முதல் அங்கு படப்பிடிப்பு தொடங்குகிறது.
Similar News
News December 2, 2025
கருமத்தம்பட்டி அருகே 16 பேர் அதிரடி கைது!

கருமத்தம்பட்டி அருகே கொள்ளுப்பாளையம் பகுதியில், கருமத்தம்பட்டி போலீசார் வழக்கமாக ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு தென்னந்தோப்பு பகுதியில் சேவல் சண்டையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்து, 2 சேவல்கள், ரொக்கப் பணம் ரூ.9700, 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
News December 2, 2025
பைக் ரேசிங்கில் சாதித்த மாணவிக்கு எம்எல்ஏ பாராட்டு

தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இளையோர் பைக் ரேசிங் போட்டியின் மாவட்ட அளவில் தகுதிச் சுற்றில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி சஞ்சனா ஶ்ரீ 2-ஆம் இடம் பெற்று சிறப்புடன் தேர்வாகியுள்ளார். இதன் காரணமாக, அச்சிறுமியை இன்று (டிச.1) கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து, அச்சிறுமியின் சாதனையை பாராட்டி, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.